முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அதிபருக்கு அரசு பொதுமன்னிப்பு பெரு நாட்டில் கலவரம் வெடித்தது

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

லிமா: ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து அந்த நாட்டில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரி. இவர் 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும் அரசை எதிர்த்து போராடிய 25 பேரை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வயது முதுமை காரணமாக சிறையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெருவின் தற்போதைய அதிபர் பெட்ரோ பாப்லோ முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் லிமா உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்து பெரும் கலவரமாக மாறியுள்ளது. இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து