முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற நாடுகளை உளவு பார்க்க செயற்கைகோளை ஏவ வடகொரியா திட்டம்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

வடகொரியா: ஏவுகணை சோதனைகள் நடத்துக்கூடாது, செயற்கைகோள் ஏவக்கூடாது என்ற ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா புதிய உளவு செயற்கைகோளை ஏவு உள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நாவும், அமெரிக்காவும் எதை எதிர்க்கிறதோ அதை மட்டுமே செய்வது தான் முழுநேர வேலையாக கொண்டுள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். ஐநாவின் தடைகளை மீறி பல ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.

வடகொரியாவின் இந்த தொடர் நடவடிக்கையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்கொரியாவுக்கு வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவானது. தென்கொரியாவுக்கு அமெரிக்காவின் தீவிர ஆதரவு இருப்பதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் அது மூன்றாம் உலகப்போராக மாற வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் தென்கொரியாவில் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வடகொரியா புதிய உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் கொண்ட அந்த செயற்கைகோள் மூலமாக தேவைப்படுவதை துல்லியமாக படம்பிடிக்க முடியும் என்றும் இதனை உளவு வேலைகளுக்காக பயன்படுத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து