முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி வசூல் 80ஆயிரம் கோடியாக குறைந்தது: மத்திய அரசு அதிர்ச்சி

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஜி.எஸ்.டி கவுன்சில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளித்து வருவதால் மாதத்திற்கு மாதம் ஜி.எஸ்.டி சேவை வரி வசூல் குறைந்து வருவதாக கருதப்படுகிறது.

ஜி.எஸ்.டி வரி கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டியின் வசூல் ஆரம்பத்தில் உச்சத்திலிருந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் அது குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 94ஆயிரம் கோடியாக இருந்த வசூல், அடுத்த மாதம் 90ஆயிரம் கோடியாக குறைந்தது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடந்த நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூல் 80ஆயிரம் கோடியாக குறைந்து விட்டது.

இது தற்போது மத்திய அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஜி.எஸ்.டிக்கு நாடு முழுவதும் பல வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி 200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்களித்தது. இந்த முடிவு தான் ஜி.எஸ்.டி வசூல் தொடர்ந்து சரிந்து வருவதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள் அடுத்தாண்டு ஜனவரி முதல், வரி வசூல் ஒழுங்குமுறையாக நடைபெறும் என்றும், அதன் பின் சீராக ஜி.எஸ்.டி வரி வசூலின் அளவு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து