முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூரில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தகவல்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      கடலூர்

2017-18-ம் ஆண்டின்  முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில்  06.01.2018   மற்றும்  07.01.2018 ஆகிய தினங்களில்  தடகளம், நீச்சல், இறகுப்பந்து, மேசைபந்து, டென்னிஸ், கபாடி கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, வளைகோல் பந்து  ஆகிய விளையாட்டுப் போட்டிகள் (இருபாலருக்கும்) நடைபெறவுள்ளது. மாவட்ட  அளவிலான  விளையாட்டுப்  போட்டிகளில்   கலந்துகொள்ள விபரங்கள்.

முதல்வர் கோப்பை

இப்போட்டியில்  கலந்து கொள்பவர்கள் 31.12.2017 அன்று 21 வயது  பூர்த்தி அடையாதவர்களாக இருத்தல்  வேண்டும். (01.01.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும் - இதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்). 21 வயது பூர்த்தியாகாதவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.       மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெறுபவர்கள் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்வீராங்கனையாக தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படுபவரை மாவட்ட அணியாக, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்க படுவார்கள். மாவட்ட அளவிலான  தடகளம் நீச்சல் மற்றும் குழுப் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள்  தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்று  மற்றும்  பிறப்பிடச் சான்றிதழ்  அல்லது இருப்பிடச் சான்றிதழ் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.   சமர்ப்பிக்காதவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கட்டாயமாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள, விளையாட்டு வீரர்கள்  வீராங்கனைகள் சொந்த  மாவட்டத்திற்காகவோ  பணிபுரியும் மாவட்டத்திற்காகவோ  பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாவட்டத்திற்காகவோ விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அதற்குரிய ஆதாரங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் நேரிடையாக  மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது. மாவட்ட அளவிலான  முதலமைச்சர் கோப்பைக்கான தனிநபர்  குழுப் போட்டியில் முதல் மூன்று  இடங்களை பெறும் அணி வீரர்கள்  வீராங்கனைகளுக்கு   தலா ரூ.1000-,  ரூ.750-  மற்றும் ரூ.500- ம்  பரிசுத் தொகை வழங்கப்படும்.  பரிசுத் தொகை வழங்கப்படும் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை  வழங்கப்படவுள்ளதால் அனைத்து போட்டியாளர்களும் தனது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை போட்டியில் கலந்து கொள்ளும்போது கட்டாயம் எடுத்து வரவேண்டும் தனிநபர் மற்றும் குழுப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் அணியின் பெயர்களை 01.12.2017 மாலை  5.00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், அலுவலகத்தில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில்  முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும்.  முன்பதிவு செய்யாத அணிகள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆண்களுக்கான தடகள போட்டி,பெண்களுக்கான தடகள போட்டி.  மேசைப்பந்து,  டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) மேசைப்பந்து, டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டிய ஆகிய பிரிவுகளில் நடைபெறும்    மேற்கண்ட விளையாட்டுக்களை தேர்வுப் போட்டிகளாக  நடைபெறாதுஒரு நபர் தனிநபர் அல்லது குழுப் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.போட்டிகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரர்  வீராங்கனைகள்    ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடையுமாறு கடலூர் கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து