முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டல் ஊராட்சி மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ. 27 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 168 பயனாளிகளுக்கு ரூ. 27 இலட்சத்து 5 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

168 பயனாளிகளுக்கு ரூ. 27 இலட்சத்து 5 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் கலெக்டர் கே.விவேகானந்தன், பேசியதாவது:- தமிழக அரசின் ஆணையின்படி தருமபுரி மாவட்டத்தில் மாதம் ஒரு நாள் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்கள் வருகைத்தந்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிந்துகொள்ளும் வகையில் திட்ட விளக்கவுரை ஆற்றியுள்ளார்கள். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 43 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகள் முழுமையாக கிடைத்திட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நலத்திட்ட உதவி

 

முன்னதாக மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில்;, பட்டா மாறுதல் 7 பயனாளிகளுக்கும்;, தனிப்பட்டா 30 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 4 பயனாளிகளுக்கும், சிறுவிவசாயி சான்று 15 பயனாளிகளுக்கும், ழுடீஊ சான்று 2 பயனாளிகளுக்கும், அரசு பணியில் இல்லை எனச் சான்று 2 பயனாளிகளுக்கும், விதவைச் சான்று 5 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. இயற்கை மரணம் அடைந்த குடும்பத்தைச் சேர்ந்த 18 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 42 ஆயிரத்து 500, திருமண உதவித்தொகையாக 17 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 38 ஆயிரமும், காசநோய்க்கான உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரமும், முதியோர் உதவித்தொகையாக 14 பயனாளிகளுக்கு ரூ.16 இலட்சத்து 80 ஆயிரமும், ஊனமுற்றோருக்கான உதவித்தொகையாக 2 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 40 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்ட வழங்கல் துறை சார்பில் மின்னனு குடும்ப அட்டை 41 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 17 ஆயிரத்து 300 மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.480 மதிப்பில் விதைகளும், வேளாண்மைத்துறை சார்பில் உழவு இயந்திரங்கள் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும்; என ஆக மொத்தம் 168 பயனாளிகளுக்கு ரூ. 27 இலட்சத்து 5 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.

இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) முத்தையன், தாட்கோ பொது மேலாளர் வைத்தியநாதன், சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்ட அலுவலர் பத்மாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் இளங்கோவன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர். மரு.வேடியப்பன், உதவி இயக்குநர் கலால் மல்லிகா, காரிமங்கலம் வட்டாட்சியர் ரேவதி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து