முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணிகள்: ஆணையாளர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 24 ல் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார்.

கான்கிரீட் தளம்

எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயண நிமித்தமாக வந்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தில் மொத்தம் உள்ள 4 தளங்களில் 80 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளது. இப்பேருந்து நிலைய வளாகத்தினுள் உள்ள சாலைகள் அனைத்தும் தார்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலைகளில் உள்ள தார் தளங்களில் ஏற்படும் பாதிப்புகளினால் பேருந்துகள் இயக்குவதற்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு , மேற்படி தார்தளங்களை உறுதியான கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்பும் நிதி 2016 – 17 ன் கீழ் ரூ 5.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து தார் தளங்களும் கான்கிரீட் தளங்களாக மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலகர் மேற்கொள்ள ஆணையாளர் அறிவுறுத்தினார். பின்னர் பேருந்துகள் உள் நுழைவதற்காக அமைக்கப்பட்டு வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும், மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் ஜி. காமராஜ், உதவி செயற்பொறியாளர் வி.திலகா உதவி பொறியாளர் திருமதி என். சுமதி உள்பட பலர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து