முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியளிகப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் 14வது நிதிக்குழு திட்டத்தில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.5 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளின் தொடக்க நிகழ்ச்சி  கோபி நகராட்சி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பார்த்தீபன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் ரேவதிதேவி, கந்தவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கோபி குள்ளம்பாளையம் மற்றும் நாகர்பாளையத்தில் தலா ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது&
மத்திய அரசின் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 100 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  இதில் 75 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதி உள்ள மையங்களும் விரைவில் ª தாடங்ப்படும .அதில்  1 லட்சம் மாணவர்கள் சேர்வார்கள். இந்த மையங்களில் சேரும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோபி கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக படகுசவாரி விடவும், குளியல் அறை, ஓய்வு அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைப்போல் கோபி காந்திநகர் பகுதியில் உள்ள குளத்தில் படகு சவாரி விடுதல் என மொத்தம் ரூ.1 கோடி செலவில் கோபி பகுதியில் உள்ள சுற்றுலாதளங்கள் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கே..ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து