முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஏமனில் சவுதி தொடுத்த போருக்கு ஒரே நாளில் பொதுமக்கள் 68 பேர் பலி'

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

சனா: ஏமனில் சவுதி தொடுத்த அபத்தமான, வீணான போருக்கு ஒரே நாளில்  68 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான ஐ.நா. மனிதாபிமானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏமனுக்கான ஐ. நா. மனிதாபிமானி ஜேமி மெக்கோல்டு கூறும்போது, சவுதி தொடுக்கும் அபத்தமான, வீணான போருக்கு ஏமன் தலைநகர் சனாவில் ஒரே நாளில் நடத்தப்பட்ட இரு வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 68 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

சவுதி ஏமன் மீது நடத்தும் போருக்கு அப்பாவி பொதுமக்கள்தான் பலியாகின்றனர். தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து சவுதியின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

சவுதி தலையீடு ஏமனில் ஏற்பட்டது முதல், இதுவரை 7,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து