முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத்தில் ஐ.பி.சி மசோதா ஒப்புதல் பெற்றது

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு திரும்பச் செலுத்த முடியாமல் திவாலாகும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பணத்தை வங்கிகள் மற்றும் அரசு வசூல் செய்யும் உரிமையை மறுசீரமைப்புச் செய்து தாக்கல் செய்யப்பட்ட ஐபிசி மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று மாலை 4.00 மணிக்கு ஒப்புதல் பெற்றது.

இந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அருண் ஜெட்லி, இந்திய வங்கிகளில் தற்போது குவிந்துக்கிடக்கும் அதிகளவிலான வராக்கடன் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு அளிக்கப்பட்டது என்று விளக்கியுள்ளார்.

இந்திய வங்கிகளில் தற்போது குவிந்துக்கிடக்கும் அதிகளவிலான வராக்கடன் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு அளிக்கப்பட்டது .பிஜேபி காரணமில்லை .
 - நிதியமைச்சர் அருண் ஜெட்லி

இதன் மூலம் வங்கிகளில் தற்போது குவிந்துள்ள வராக்கடனுத்து பிஜேபி காரணமில்லை என்ற மறைமுகமாகத் தங்களது ஆட்சியின் மீது இருந்த கரையைத் துடைத்துள்ளார்.

மேலும் இவர் பேசுகையில் வங்கிகள், பாதிப்பில் இருக்கும் சொத்துகளுக்கு அதிகளவில் கொடுக்கும் வாயிலாக அமைந்துள்ளது. இது வங்கிகளின் தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் குறித்துத் தகவல்கள் ரிசர்வ் வங்கி செய்த சொத்து மதிப்பீட்டு ஆய்வின் பின்பே தெரிய வந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் பேசிய அருண் ஜெட்லி கூறினார்.

ஆய்விற்குப் பின்பு ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு வராக்கடன் மற்றும் பாதிப்பு நிறைந்த சொத்து பற்றிய அழுத்தம் அதிகளவில் கொடுக்கக் காரணமாக வராக்கடனுக்குத் தள்ளப்பட்ட சொத்து மற்றும் கடனின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது என ஜெட்லி தெரிவித்தார்.

ஐபிசி மசோதா என்றால் என்ன..?
தனிநபர், குடும்பம், சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரையில், கார்ப்பரேட் என அனைத்துத் தரப்பினரும் ஒருகட்டத்தில் வராக்கடன் அல்லது செயல்படா சொத்துகள் மூலம் வங்கி மற்றும் மக்கள் பணத்தைத் திவாலாக்கி விடுகின்றனர்.

உதாரணமாகத் தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவை எடுத்துக்கொள்ளலாம்.

இத்தகைய சூழ்நிலையில் உரிய நபர்களிடம் இருந்து மக்கள் அல்லது வங்கிகள் இழந்த பணத்தைத் திரும்பப்பெறும் சட்ட விதிமுறைகளைத் தான் Insolvency and Bankruptcy Code என அழைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து