முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் காவலரை கன்னத்தில் அறைந்த காங்., எம்.எல்.ஏ.வுக்கு ராகுல் கண்டனம்

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில், பெண் காவலரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு, கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:
"இதுபோன்று செயல்படுவதை ஏற்க முடியாது. காந்தியவாதியான நாம், கோபம், வெறுப்பு, மோசமான செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. இதுபோன்று நடந்து கொள்வது காங்கிரஸின் கலாச்சாரம் அல்ல. துரதிர்ஷ்டவசமான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல், நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

காந்தியவாதியான நாம், கோபம், வெறுப்பு, மோசமான செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. இதுபோன்று நடந்து கொள்வது காங்கிரஸின் கலாச்சாரம் அல்ல. துரதிர்ஷ்டவசமான செயல்.
ராகுல்காந்தி

பெண் காவலர் மீது தாக்குதல்
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிம்லாவில் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆஷா குமாரி, தன்னை கூட்டம் நடந்த இடத்திற்குள் அனுமதிக்குமாறு கோரினார். அப்போது, அங்கிருந்த பெண் காவலர் ஒருவருடன் ஆஷாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அந்த பெண் காவலரை, ஆஷா குமாரி கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலரும் எம்.எல்.ஏ.வை திருப்பி அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து