முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் கிறிஸ்தவர்களை குறி வைத்து துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

கெய்ரோ: எகிப்தில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் கடை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகினர்.

இதுகுறித்து எகிப்து உள்துறை அமைச்சகம் தரப்பில், "எகிப்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவலாயம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். மேலும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடத்தி வந்த கடை ஒன்றிலும் தூப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களில் 11 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவதிகள் பொறுப்பேற்று கொண்டுள்ளதாக அமாக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எகிப்தில் மின்யா மாகாணத்தில் கடந்த மே மாதம் கிழக்குப் பகுதியில் செயிண்ட் சாமுவேல் தேவலாயத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

எகிப்திலுள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகள் சமீப காலமாக தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து