முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்மையான வழியில் லட்சியத்தை அடைய வேண்டும்: ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேச்சு

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, நேர்மையான வழியில் நமது லட்சியங்களை அடைய வேண்டும் என்றும் குறுக்கு வழியில் செல்லக் கூடாது என்றும் ரசிகர்கள் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5-வது நாளாக நேற்றும் ரசிகர்களுடனான சந்திப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றைய சந்திப்பின்போது ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசியதாவது:- என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973-ல் முதல் முறையாக சென்னை வந்தேன். 1960-களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாக பேசிக்கொள்வார்கள். சென்னை எனக்கு எப்போதும் மெட்ராஸ்தான். தமிழ் சினிமாவிற்கு வந்தபோது எனக்குத் தமிழ் தெரியாது. இயக்குனர் பாலச்சந்தர் என்னிடம், ‘நீ தமிழை கற்றுக்கொள், உன்னை எங்கு கொண்டு செல்கிறேன் பார்’ என சொன்னார். தனது மகன்களுடன் சேர்த்து என்னையும் மகனாக பார்த்தவர் பாலச்சந்தர்.

சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் உள்ளிட்ட இயக்குனர்கள் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள். இயக்குனர் ஷங்கர், இந்தியாவிற்கே ரஜினிகாந்த் தெரியும்படி செய்தவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக என் வளர்ச்சிக்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். இப்போது என்னுடைய கலைவாழ்க்கை 2 பாயிண்ட் ஓ-வில் வந்து நிற்கிறது. கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம், அது கனவாக போகும் போது இருக்காது. நாம் கண்ட கனவு நனவாகவில்லை என்றால் வருத்தப்படத் தேவையில்லை. அதற்காக கனவு காண வேண்டாம் என்று கூறவில்லை. கனவு காணவேண்டும். ஆனால், அதை நியாயமான வழியில் நனவாக்க வேண்டும். குறுக்குவழியில் நமது கனவுகளை நனவாக்க முயற்சிக்கக்கூடாது. நேர்மையான வழியில் லட்சியங்களை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து