முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுரிமை ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி - மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வாக்கு என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி  இதுதான் நம் தேசத்தையே மாற்றக்கூடியது  என்றும் தன்னம்பிக்கை இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியா நோக்கிச் செல்வோம் என்றும்  ஆண்டு இறுதி வானொலி உரையில் பிரதமர்  நரேந்திர மோடி பேசினார்.

2017-ம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி ‘புதிய இந்தியா’வை நோக்கிச் செல்வோம் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“பல பேர் தங்களது சீரிய முயற்சிகளால் பலபேர் வாழ்க்கையில் தன்னம்பிக்கையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர், உண்மையில் இது ‘புது இந்தியா’ இதனை நாம் அனைவரும் சேர்ந்து கட்டமைத்து வருகிறோம். புத்தாண்டை சிறிய மகிழ்ச்சியுடன் வரவேற்போம், தன்னம்பிக்கை இந்தியா என்பதிலிருந்து முன்னேற்ற இந்தியா என்பதை நோக்கிச் செல்வோம்” என்றார்.

‘புது இந்தியா’ இதனை நாம் அனைவரும் சேர்ந்து கட்டமைத்து வருகிறோம். புத்தாண்டை சிறிய மகிழ்ச்சியுடன் வரவேற்போம், தன்னம்பிக்கை இந்தியா என்பதிலிருந்து முன்னேற்ற இந்தியா என்பதை நோக்கிச் செல்வோம்”  - பிரதமர்  நரேந்திர மோடி

பிரதமர் தனது உரையை கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களுடனும் பைபிள் வாசகத்துடனும் தொடங்கினார், “மானுட புத்திரன் வந்து விட்டார், அவருக்குச் சேவை செய்வதற்காக அல்ல, அவர் சேவை செய்வதற்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க, அனைத்து மனிதகுலத்துக்குமான ஆசீர்வாதமாய்” என்று பைபிளை மேற்கோள் காட்டினார் மோடி.

ஆண் துணையுடன் தான் ஹஜ் யாத்திரைச் செல்ல வேண்டும் என்று முஸ்லிம் பெண்களுக்கு விதியிடுவது பாகுபாடானதாகும், இந்த ஆண்டு சுமார் 1,300 பெண்கள் ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆண் துணை இன்றித்தான்.

இன்று ஜனவரி 1 சிறப்பான தினமாகும். இன்று பிறக்கும் குழந்தைகளை வரவேற்போம். வாக்கு என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி, இதுதான் நம் தேசத்தையே மாற்றக்கூடியது. புது இந்தியா இளைஞர்கள் 2022-ம் ஆண்டு நாடு அடையும் லட்சியங்களுக்கான கருத்துகளையும், யோசனைகளையும் வழங்க வேண்டும்.

10  ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நாட்டின் குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வருகின்றனர். மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக்க நாம் 2014-ல் பாடுபடுவோம். இதற்காக பெரிய அளவில் முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

2017-ன் தன்னம்பிக்கைத் தருணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று முறையிட்டேன், இதனையடுத்து பாசிட்டிவ் இந்தியா என்ற பதிவின் கீழ் சுமார் 150 கோடி மக்கள் தங்கள் உற்சாகமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ட்வீட்கள் மிகவும் உற்சாகமூட்டக்கூடியதாக இருந்தது.

இந்தப் புத்தாண்டுக்குள் இத்தகைய தன்னம்பிக்கையுடனும், தன்னம்பிக்கை இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியாவை நோக்கி பயணிப்போம்” என்றார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து