முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் வீட்டுத்தோட்டத்தினை ஊக்கப்படுத்தும் விதமாக மானியத்தில் காய்கறி விதைப்பாக்கெட்டுகள் : மாவட்ட கலெக்டர் இராசாமணி தகவல்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      திருச்சி

 

திருச்சி மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டத்தினை ஊக்கப்படுத்தும் விதமாக 40 சதவீத மானியத்தில் காய்கறி விதைப்பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி. தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தோட்டமாவது தன் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தாமே விளைவித்து அதன் பயனை அடைவது, இதனால் நாம் காய்கறி கடைகளுக்கோ அல்லது மார்ககெட்டுக்கோ சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்க தேவையில்லை. பண விரயமும், நேர விரயமும் தவிர்க்கப்படும். மேலும் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைப்பதால் விதைகளுக்கும், உரம் போன்ற பொருட்களுக்கும் அதிக அளவில் பணம் செலவிட தேவை இருக்காது.

விற்பனை

நமக்கு தேவையான காய்கறிகளை நாமே வீட்டில் பயிரிடுவதன் மூலம் என்ன மாதிரியான உரங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பதில் கட்டுப்பாடு இருக்கும் இதனால் இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை முறையில் கிடைக்கும் உரங்களை உபயோகித்து நல்ல சுவையான ஆரோக்கியமான நஞ்சில்லா காய்கறிகளை பெறமுடியும். வீட்டுத்தோட்டத்தில் கிடைக்கும் காய்கறிகள் சந்தை மற்றும் கடைகளுடன் ஒப்பிடும்பொழுது நல்ல சுவை அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு வீட்டுத்தோட்டத்தினை ஊக்கப்படுத்தும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் ரூ.12க்கு காய்கறி விதைப்பாக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளன.

இதில் மிளகாய், கத்தரி, முருங்கை, அவரை, பாகல் ஆகிய 5 வகையான விதைகள் உள்ளன. இதற்கு ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை வழங்கி விதைப்பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஒரு நபர்க்கு 6 விதைப்பாக்கெட்டுகள் வரை பெற்றுக் கொள்ளலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விதைப்பாக்கெட்டுகளை பெறலாம் என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி. தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து