முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் துணை முதல்வர் நிதின் படேலுக்கு மீண்டும் நிதித்துறை

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத், குஜராத்தில் துணை முதல்வர் நிதின் படேலின் அதிருப்தியை, பாஜக தலைமை சமரசத்திற்கு வந்தது. அவருக்கு மீண்டும் நிதித்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அம்மாநில முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக நிதின் படேலும் பொறுப்பேற்றார். பதவியேற்புக்குப் பின் புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன. துணை முதல்வர் நிதின் படேலிடம் இருந்த, நிதித்துறை, சவுரவ் படேலுக்கு வழங்கப்பட்டது.

 "பதவிக்காக நான் அதிருப்தியடையவில்லை. எனது சுயமரியாதை காப்பற்றப் பட வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. அதனை ஏற்று கட்சித் தலைமை மீண்டும் நிதித்துறையை வழங்கியுள்ளது. - நிதின் படேல்

முதல்வருக்கு அடுத்தநிலையில் துணை முதல்வராக இருந்தபோதிலும், நிதித்துறை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதால் நிதின் படேல், அதிருப்தி அடைந்தார். இதனால் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை. இதையடுத்து, பாஜக தலைவர் அமித் ஷா, நிதின் படேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு மீண்டும் நிதித்துறை வழங்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி. நிதித்துறை அவருக்கு ஒதுக்கப்படுவதாக முதல்வர் ரூபானி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதுபற்றி நிதின் படேல் கூறுகையில் "பதவிக்காக நான் அதிருப்தியடையவில்லை. எனது சுயமரியாதை காப்பற்றப் பட வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. அதனை ஏற்று கட்சித் தலைமை மீண்டும் நிதித்துறையை வழங்கியுள்ளது" எனக்கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து