முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்ககிரியில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      சேலம்
Image Unavailable

 

சங்ககிரி பா.ஜ.க. சார்பில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 96 பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜமுத்தையா ஹாலில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இலவச கேஸ் இணைப்பு

இந்த கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சௌந்தராஜன் தலைமை வகித்தார். பொது செயலாளர் வெங்கடாசலம், சங்ககிரி ஒன்றிய தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர செயலாளர் ராஜமுத்து, மகளிர் அணி தலைவி பிரியா, செயலாளர் நிர்மலா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சஞ்சீவ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 96 பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து