முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னிப்பின் மாண்பை அறிவோம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

குற்றம் செய்தவரைக் கருணையினால் பொறுத்துக்கொள்ளும் திறனே மன்னிப்பு. மற்றவர்கள்பால் இரக்கமும், கருணையும் உள்ளவராக நடந்து கொள்ளும் ஆற்றலை அது அளிக்கிறது. தவறிழைப்போர் அனைவரிடமும் இரக்க மனோபாவத் துடன் நடந்து கொள்ளுமாறு மன்னிப்பு தூண்டுகிறது. ஒருவரைத் தெய்வீகப் பணியில் பங்குபெறுகிறவராக அது ஆக்குகிறது. மன்னிப்பு அளிப்பவர், பெறுபவர் ஆகிய இருவருக்கும் அது அருளாசியைக் கொண்டு வருகிறது. குற்றமனத்தின் சுமையை மன்னிப்பு இலகுவாக்கி விடுகிறது. முறிந்து போன உறவுகளை அன்போ டும், பரந்த மனத்தோடும், அருளிரக்கத்தோடும் அது சீராக்குகிறது. உள்ளத்தைக் குணமாக்குகிறது. காயமுற்ற உள்ளத்தைக் கொண்டவர்கள் மீண்டும் சுயநன்மதிப்பு பெற அது உதவுகிறது. அது இறைவனுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கிறது. இன்பம், அமைதி, உள்ளம் குணமாதல், நல்ல மனம் ஆகியவற்றை மன்னிப்பு உருவாக்குகிறது.

எடுத்துக்காட்டு

ஒருமுறை உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சி இறை இயேசு வின் இறுதி இரவு உணவுச் சித்திரத்தைத் தீட்டிக்கொண்டிருந்தார். தமது சித்திரம் தீட்ட அழைத்து வந்திருந்த ஒரு மனிதன் மேல் அவருக்கு அடங்காக் கோபம் இருந்தது. அவர் மீது கோபம் பற்றி எரிந்தது; கடுஞ்சொற்களால் அவனை வசை பாடினார். அவனை வெளியே அனுப்பிவிட்டு மீண்டும் அவர் சித்திரம் தீட்டினார். இயேசுவின் முகத்தின் மீது மெல்லிய கோடுகளை வரைய முயன்றார். ஆனால் இயேசுவின் முகத்தோற்றத்தை மனக்கண்ணால் உற்றுநோக்கி உருக்கொடுக்க இயலாதவாறு கவனம் சிதைந்தது. ஓவியம் தீட்டுவதை அப்படியே விட்டு விட்டு தான் வசைமாறி பொழிந்த மனிதரிடம் மன்னிப்பு வேண்டுவதற்கு புறப்பட்டார். அவரது கோபத்துக்கு இலக்கான மனிதர் டாவின்சியை மன்னித்து ஏற்றுக் கொண்டதாக உணர்ந்த பிறகுதான் அவர் மனச்சான்று சீராகியதாக உணர்ந்தார். மீண்டும் வந்து இயேசுவின் முகத்தை மனநிறைவோடு தீட்டி முடித்தார்.

மன்னிப்பு மதிப்பைப் பண்படுத்திக்கொள்ள வழிமுறைகள்

பிறர் மீது குறைகூறிக் குவிக்கும் சோதனையை வெற்றிகொள்ளல், குற்றம் செய்த நம் தோழர்களை மன்னித்தல், மற்றவர்கள் வாய்ச்சண்டையில் ஈடுபடும் போது தலையிட்டு இணக்கத்தை ஏற்படுத்தல், பெரியவர்கள் கண்டித்து நம்மைத் திருத்தும் போது, அதன் காரணமாக மனபாதிப்பு அடையாமல் ஏற்றுக்கொள்ளல், தவறு செய்யும் பொழுது மன்னிப்பு கேட்க முந்திக்கொள்ளல், நமக்கு உதவி செய்வோரின் கவனக்குறைவு குறித்து பரந்த நோக்குடன் மன்னித்து விடுதல், முரட்டுத்தனமும் திமிரானதுமான நடத்தையைத் தவிர்த்தல், சிந்தனை, சொல், செயல் ஆகிய அனைத்திலும் மன்னிப்பைக் கடைபிடித்தல், பிறர் ஏற்படுத்திய உள்மனக் காயங்களை மன்னிக்க முயற்சி செய்தல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து