முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கானோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி, மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஏற்பட் டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் வியாபித்து பரவி வருகிறது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 12 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இந் நிலையில் திங்கள்கிழமை இரவு பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்காரண மாக பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் 6-வது நாளாக நேற்றும் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அரசு அலுவலகங்கள், வாகனங்கள், வங்கிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கிளர்ச்சியை கட்டுப்படுத்த முக்கிய நகரங்களில் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதள சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி நேற்று கூறியபோது, “ஈரானின் இஸ்லாமிய அரசை சீர்குலைக்க எதிரி கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த எதிரிகள் தங்களின் பண பலம், ஆட் பலத்தை பயன் படுத்தி அரசுக்கு எதிராக சதியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து