முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிட்காயின் பரிவர்த்தனை சட்டபூர்வமானதல்ல

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

பிட்காயின் பரிவர்த்தனை சட்ட பூர்வமானதல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார். இது தொடர்பாக நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகே எவ்வித முடிவையும் அரசு எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பிட்காயின் பரிவர்த்தனை பொன்ஸி திட்டங்கள் போன்று மக்களை ஏமாற்றக்கூடியது.இதில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயங் கள் ஏதுமில்லை என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதுபோன்ற மெய்நிகர் முதலீடுகள் அனைத்துமே மிகவும் சிக்கலானவை. இது எந்த நேரத்திலும் வெடிக்கும். முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதுபோன்ற அதிக லாபம் தரும் திட்டங்கள் ஈர்த்து முடிவில் ஏமாற்றத்துக்குள்ளாக்கும் அபாயம் உள்ளவை. எனவே முதலீட்டாளர்களாகிய மக்கள்தான் விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று ஜெட்லி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து