முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருதரப்பு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலின் போது இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

புத்தாண்டு வாழ்த்து
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இரு நாட்டு நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுப்பது தொடர்பாக அவர்கள் விவாதித்தாகவும் கூறப்படுகிறது.

அரசுமுறைப் பயணம்
ராணுவத் தளவாடக் கொள்முதல் நடவடிக்கைகள் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் ரஷியா இடையே பல உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு தருணங்களில் ரஷ்யாவுடன் தீவிர நட்பை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம் சென்றதும், அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கடந்த 2016-ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புடின் இந்தியா வந்தது கவனிக்கத்தக்கது.

ரஷ்யத் தூதரகம் தகவல்
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசி வாயிலாக புதன்கிழமை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும், சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தார். இந்த விவரங்களை டெல்லியில் உள்ள ரஷ்யத் தூதரகம் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து