முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி அடுத்த வாரம் பஹ்ரைன் பயணம்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ராகுல் காந்தி அடுத்த வாரம் பஹ்ரைன் பயணம் மேற்கொள்கிறார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  அடுத்த வாரம் பஹ்ரைன் நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 7-ம் தேதி பஹ்ரைன் செல்லும் ராகுல் காந்தி 9-ம் தேதி இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது சுற்றுப்பயணத்தின் போது, பஹ்ரைனில் வசிக்கும் வெளிநாடும் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

மன்னர் குடும்பத்தினருடன் சந்திப்பு

பஹ்ரைன்  நாட்டு பிரதமர் கலிபா பின் சல்மானையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார். அந்நாட்டு மன்னர் குடும்பத்தினரையும் சந்தித்து பேச உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் ராகுல் காந்தி உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் அவர்கள் மத்தியில் உரையாற்றுவதால்,

முதல் வெளிநாட்டு பயணம்

இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் காந்தி தற்போது தனது தாயார் சோனியா காந்தியுடன் கோவாவில் உள்ளார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து