முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதமாற்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்: ஆரணியில் எச்.ராஜா பேட்டி

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      வேலூர்

ஆரணியில் பாஜக சார்பில் நடைபெற்ற மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் மதமாற்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

ராஜா பேட்டி

ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டதலைவர் எஸ்.நேரு தலைமை தாங்கினார்.மேலும் இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு வருகின்ற உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்று குறித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது, மதமாற்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். . மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி மதமாற்றங்களை செய்து வருவது தவறான செயலாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. காசுக்காக மக்கள் விலை போகக்கூடாது. நடைபெற்ற தேர்தல் அரசியல் நிலை காணும் தேர்தல் அல்ல. காசுக்காக விலை போன தேர்தல் ஆகும். இது சம்பந்தமாக நடிகர் கமல் விமர்சனம் செய்ததை வரவேற்கிறேன். பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி வர காரணம் லஞ்சத்தை ஒழிக்கத்தான். மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு கழிவறை கட்ட ரூ.12ஆயிரம் வழங்குகிறது. இவற்றை கண்காணிக்கத்தான் ஆளுநர் ஆங்காங்கே ஆய்வுப்பணியை செய்து வருகிறார்.

தவறு இல்லை

ரஜினிகாந்த், கருணாநிதியை நட்பு ரீதியாக பார்த்ததின் எவ்வித தவறும் இல்லை.மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட பாஜக வாக்கு குறைவாக பெற்றுள்ளதே என்று கேட்டதற்கு, திமுகவுடன் 18 கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டனர்.அவர்கள் பெற்ற வாக்குகள் சுமார் 24ஆயிரம். இதனை 18 கட்சிகளுக்கு பிரித்தால் சுமார் ஆயிரத்து சொச்சம்தான் வரும். அப்படி பார்க்கும்போது திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றுள்ளது என்று கூறினார்.

முன்னதாக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு ஆரணி எல்லையில் வரவேற்பு அளித்தனர். பின்னர் இரும்பேடு நான்குமுனை சந்திப்பில் பாஜக கொடியேற்றினார். பின்னர் கட்சியினரிடையே ஆலோசனை நடத்தினார்.

உடன் கோட்டபொறுப்பாளர் பிரகாஷ், மாவட்டதுணைத்தலைவர்கள் எஸ்.மூர்த்தி, சுந்தரமூர்த்தி, நகர தலைவர் தரணி, நகர பொதுச்செயலாளர் ராஜ்மோகன், மாவட்டபொதுச் செயலாளர்கள் வெங்கடேசன், மோகனம், பாலு, மாவட்டநெசவாளர் அணி தலைவர் கே.ஜெ.கோபால், மாவட்டமகளிரணி செயலாளர் அலமேலு, மாவட்டசெயற்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றியபொதுச்செயலாளர்கள் வேலு, ஆனந்தன்,ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து