முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது நிர்வாகம் பற்றிய புத்தகங்கள் அனைத்தும் பொய்களால் நிறைந்தது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தனது நிர்வாகம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள புத்தகம் முழுவதும் பொய்களால் நிறைந்தது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபமாக கூறியுள்ளார்.

அமெரிக்க பத்திரிக்கையாளர் மிச்சேல் உல்ப், அதிபர் டிரம்ப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘டிரம்பின் வெள்ளை மாளிகைக்குள் கோபக்கனல்’ என்ற அந்த புத்தகத்தில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கூறியுள்ளார். இந்த புத்தகம் இன்னமும் வெளியிடப்படவில்லை. எனினும் அதில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வெளி வந்துள்ளன.

வெள்ளை மாளிகைக்குள் வந்து செல்ல நான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. என்னை பற்றிய புத்தகத்தை எழுதியவரிடம் நான் எந்த தகவலும் சொல்லவில்லை. அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தும் பொய்களே. அதில் துளியும் உண்மையில்லை.
- டொனால்டு டிரம்ப்

அதில் "அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்கும் முன்பாக, 2016-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அமெரிக்க ஐடித்துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், டிரம்பை சந்தித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, எச்1பி விசாவுக்கு எதிராக பேசிய நிலையில் அத்தகைய நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று எச்1பி விசாவுக்கு எதிராக எதையும் செய்யப் போவதில்லை என டிரம்ப் அவர்களுக்கு உறுதியளித்தார்" என அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போலவே டிரம்ப் பற்றிய பல தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இது குறித்த டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது-
"வெள்ளை மாளிகைக்குள் வந்து செல்ல நான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இந்த புத்தகத்தை எழுதியவரிடம் நான் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அவர் எழுதியுள்ள புத்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தும் பொய்களே. அதில் துளியும் உண்மையில்லை. எந்தவித ஆதாரமும் இன்றி, இட்டுக்கட்டி அந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது" என கூறினார்.

முன்னாள் வெளியுறவுத்துறை நிபுணர் ஸ்டீவ் பனான், தனது நெருங்கிய நண்பர், ட்ரம்ப் அதிபர் பதவி வகிக்க தகுதியானவர்தானா? என கேள்வி எழுப்பியதாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே புத்தகம் வெளியாவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து