முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் அய்யப்ப தரிசனத்திற்கு பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

பம்பை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சுவாமி தரிசனத்திற்கு 8 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை வழிபாடு முடிந்து, மகர ஜோதி வழிபாடு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 14-ம் தேதி வரை நடைபெறும் மகர ஜோதி வழிபாட்டிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடுமுழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சபரிமலையில் கட்டுங்கடங்காத கூட்டம் அலைமோதுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது. கோயில் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து விரைவாக செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

அதுபோலவே பம்பையில் இருந்து செல்லும் பக்தர்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஏதுவாக போதுமான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் வெளியே வந்த பிறகே, வெளியில் இருக்கும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து