விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தமிழ் கடவுள் முருகன் பக்திமிகு காவியம்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      சினிமா
murugan

Source: provided

தமிழ் கடவுள் முருகன், இந்த பக்திமிகு காவியம் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9  மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த தொடர் முற்றிலும் முருக பெருமானின் திருக்கதையை சுற்றி அமையும். தமிழின் பெருங்காவியமான கந்தபுராணத்தை தழுவி எடுக்கப்பட்டதுதான் இந்த தமிழ் கடவுள் முருகன்.

இந்த தொடரில் முருகனின் பிறப்பு முதல் சூரசம்ஹாரம் வரை அனைத்தும் கூறப்படும். தமிழ் தொலைக்காட்சியின் வரலாற்றில் மிகபெரிய பொருள் செலவில் எடுக்கப்படும் ஒரு தொடர்கதையாக இருக்கும் இந்த தொடர். விசுவல் எபக்ட்ஸ் போன்ற தொழில் நுட்பத்தின் உதவியோடு நேயர்களின் கண்களுக்கு ஒரு பிரமாண்டமான விருந்தாக இருக்கும், இந்த தமிழ் கடவுள் முருகன்.


தற்பொழுது இந்த தொடரில், அரக்கர்களின் ஒருவனான மகிஷாசுரன் தேவர்களை சிறை பிடிக்கிறான், அவர்களை மீட்க முருக பெருமானும் போர் புரிய கிளம்புகிறார்.


மகிஷாசுரனை எந்த ஒரு சக்தியாலும் வீழ்த்த முடியாமல் போகிறது, முருகப் பெருமானின் தேவி கவசமும் தோற்கிறது. இதை கண்டு பார்வதிதேவி அவர்கள் முதன்முறையாக போர் களத்தில் அவதாரம் எடுத்து களம் இறங்குகிறார். அந்த அற்புதக் காட்சியைக் காணத் தவறாதீர்கள்.

இந்த தொடரில் பல கதாபாத்திரங்கள் உள்ளன. மாப்பிளை தொடரின் புகழ் இந்திரா பிரியதர்ஷினி இந்த தொடரில் பார்வதிதேவியாக நடிக்கிறார். மேலும் முருகனாக பேபிஅனிருதா நடிக்கிறார். தமிழ் தொலைக்காட்சி நடிகர் சிந்தர் புஷ்பலிங்கம்.

இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரமான சிவாபெருமானாக நடிக்கிறார். தமிழ்வழி வந்த  அறுபடை வீடு கொண்ட திருமுருகனின் பிரமாண்ட கதையை தமிழ்கடவுள் முருகன் தொடரில் காணத்தவறாதீர்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து