முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறைய சர்ச்சைகள் இருந்தாலும் செயல்பாடுகளில் காட்டுவோம்: விஷால் உறுதி

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

Source: provided

நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன; இருந்தாலும் செயல்பாடுகளில்தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருப்பதாக 'இரும்புத்திரை' டீஸர் வெளியீட்டு விழாவில் விஷால் தெரிவித்தார்.

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இரும்புத்திரை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறது.'இரும்புத்திரை' படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினரோடு இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநர் திரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் விஷால் பேசியதாவது:’இரும்புத்திரை’ முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலையால், இப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில் மீண்டும் படம் தள்ளிப்போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற மித்ரனின் வேண்டுதல் நிறைவேறியது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடாமல், சுயநலவாதியாக என்னுடைய படத்தில் நடித்திருக்கலாம்.

ஆனால் இந்தத் தொழில்துறை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஓரே காரணத்தால் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்தேன். ஏனென்றால் பணத்தை இன்று இழந்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும்.

ஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் என் குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தேர்தலில் சொன்ன விஷயத்தை செய்துகொண்டு இருக்கிறோம். நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன இருந்தாலும் செயல்பாடுகளில்தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம்.

அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும்.மித்ரன் இக்கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் எனத் தோன்றியது. 'துப்பறிவாளன்' படத்துக்கு பின்பு இப்படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது.இப்படம் ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் பெரிய அனுபவமாக இருந்தது. 'இரும்புத்திரை' என்னுடைய தொழில் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் வேலை செய்கிறேன் ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சினைகளையும் மறந்து சந்தோஷமாக இருப்பேன்.

படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன. என்னுடைய குருநாதர் முதலில் படத்திற்கு ஒப்புக்கொண்டு அப்பாவிற்கு தொலைபேசியில் "இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா மாத்திடான்" என்று சொல்லிவிட்டார். ரொம்ப நன்றி அர்ஜுன் சார். ரெண்டு பேருக்கும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி ஒன்று உள்ளது. அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து நடித்திருக்கிறோம்.

மேலும் படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்இவ்வாறு விஷால் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து