முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - மெக்சிகோ எல்லைச் சுவரை விரிவுபடுத்த 18 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் டிரம்ப்

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்கா மெக்சிகோ இடையே எல்லைச் சுவரை விரிவுபடுத்த சுமார் 18 பில்லியன் டாலர்களை 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலீடு செய்ய இருக்கிறார்.

அமெரிக்கா மெக்சிகோவிக்கு இடையேயான எல்லை ஓரத்தில் சுமார் 1,552 கிலோமீட்டர்களுக்கு இந்த சுவர் எழுப்படவுள்ளது. இதற்கான பணி 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், இரு நாட்டு எல்லையில் ஏறிக்கடக்க முடியாத, நுழைய முடியாத, உயரமான, பெரிய, அழகான எல்லைத் தடுப்புச் சுவர் எழுப்படும் என்று அறிவித்தார்.

இதற்கான ஒப்பந்தங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் கட்டுமானத்திற்கு அமெரிக்க கட்டுமானப் பொருட்களையே பெரும்பாலும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த எல்லைத் தடுப்புச் சுவரின் செலவுகளை மெக்சிகோ ஏற்க வேண்டும் என்று டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்தார். ஆனால் மெக்சிகோ அதிபர் இதனை ஏற்க முடியாது என்று கூறியதால். அமெரிக்கர்களின் வரி பணத்தில் இந்தச் சுவர் எழுப்பப்பட இருப்பதாக சந்தேகம் தெரிவித்தனர். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை தடுப்புச் சுவர் விவகாரத்தில் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து