முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: குண்டு வெடித்து 4 போலீசார் பலி

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீசார் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 போலீசார் ...

இந்திய எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோப்ரே பகுதியில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சோப்ரே மார்க்கெட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 4 போலீசார் பலியானார்கள். மேலும் பல போலீசார் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் கண்டனம்

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பதை அறிந்து தீவிரவாதிகள் திட்டமிட்டு இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் தீவிரவாதிகள் இந்த நாசவேலையை செய்துள்ளனர். சோட்டபஜார் - படாபஜார் மார்க்கெட் இடையே உள்ள தெருவில் உள்ள தடை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பில் பலியான போலீசாரின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து