முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க டெஸ்ட்: கோலியை கேலி செய்த டுவிட்டர்வாசிகள்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேப்டவுன் :  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களையே எடுத்துள்ளதையடுத்து டுவிட்டரில் முன்னாள் வீரர்களும், பிற டுவிட்டர்வாசிகளும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட்வாலா: முதல் தின ஆட்டத்தின் நீதிபோதனை: இலங்கைக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்?

ஆகாஷ் சோப்ரா: ஸ்லிப் திசையில் சென்ற ஒரே கேட்சை தென் ஆப்பிரிக்கா பிடித்து விட்டனர், இந்திய அணி ஸ்லிப் கேட்சைத் தவற விட்டது. அயல்நாடுகளில் சிறு விஷயங்களின் விளைவுகள் பெரிது.

லஷ்மண்: புவனேஷ் குமார் முதல் ஸ்பெல்லை அருமையாக வீசினார், ஏபிடி எதிர்த்தாக்குதல் நடத்தினார். பிறகு இந்தியா 286 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை மட்டுப்படுத்தியது. 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணியை காயப்படுத்தியிருக்கும், 2-ம் நாள் நல்ல நாளாக அமையும் என்று நம்புவோம்.

ஹர்ஷா போக்ளே: புவனேஷ்வர் குமாரின் முதல் ஸ்பெல்தான் முதல் நாள் சிறப்பம்சம். மேலும் டிவில்லியர்ஸின் எதிர்த்தாக்குதல். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என்று கருதுகிறேன்.

கோலியை கிண்டல் செய்த ட்விட்டர்வாசிகள்:

எம்.எஸ்.டியன் என்ற தோனி ஆதரவாளர்:

எதிர்பார்ப்பு: எந்த சூழ்நிலையிலும் கோலி ரன் எடுப்பார்.

உண்மை நிலவரம்: மட்டைப் பிட்சில் 200 ரன், பசுந்தரைப் பிட்சில் 20க்கும் கீழ்.
குர்ரம்:

விராட் கோலி 5 ரன்களில் அவுட். ஹனிமூன் நாட்களில் ஊழியர் ஒருவரை வேலைக்கு வரச்சொன்னால் இப்படித்தான் ஆகும்.

பாக்சிக்பாக் ராஜா பாபு:

கோச்: ஏன் தென் ஆப்பிரிக்காவில் போராடுகிறீர்கள்?

விராட் கோலி: மகாத்மா காந்தியே இங்கு போராடியிருக்கிறார்.

சிட்:

ஸ்டீவ் ஸ்மித் எந்த ஊரிலும் ஆடுவார், விராட் கோலி ஆடவேண்டுமென்றால் துணைக்கண்ட நிலைமை வேண்டும். விராட் கோலி பற்றி என்ன ஒரு ஊதிப்பெருக்கம்!

விஷால்:

ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் மோடிஜி விராட் கோலிக்கு டிப்ஸ் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கை கேலி செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து