முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி: 6ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா சாம்பியன் ஆனார். இது அவரது 10-ஆவது பட்டமாகும்.

இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் தகுதிச்சுற்று வீராங்கனையான பெலாரஸின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலமாக உலகத் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேற்றம் காணும் ஸ்விடோலினா, எதிர்வரும் ஆஸ்திரேலிய ஓபனில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடம் பிடிப்பார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்விடோலினா கூறுகையில், தற்போது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். உடற்தகுதி ரீதியாக பலத்துடன் உணரும் நிலையில், எனது ஆட்டம் குறித்த பார்வையை மாற்றிக் கொண்டுள்ளேன். இந்தப் போட்டியில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ஒவ்வொரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். சுவாரெஸ் நவாரோவுக்கு எதிரான முதல் ஆட்டம் கடினமானதாக இருந்தது. எனினும், போட்டிகள் இல்லாத காலத்தில் மேற்கொண்ட பயிற்சிக்கு பலன் கிடைத்துள்ளது என்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதிகளில் கிர்ஜியோஸ் 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவையும், ஹாரிசன் 4-6, 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரையும் வீழ்த்தினர்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ்-டெமி ஷூர்ஸ் ஜோடி 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் ஆன்ட்ரிஜா கிளேபாக்-ஸ்பெயினின் மரியா ஜோஸ் மார்டினெஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து