முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம் மல்லிகுட்டை ஊராட்சி மேடுஅள்ளி முதல் போதாபுரம் வரை தார்சாலை அமைக்கும் பணி:அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் மல்லிகுட்டை ஊராட்சி மேடுஅள்ளி முதல் போதாபுரம் வரை 2.350 கி.மீ தொலைவிற்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.60.03 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமை வகித்தார்.அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது :-

 பூமிபூஜை

காரிமங்கலம் வட்டம் மல்லிகுட்டை ஊராட்சி மேடுஅள்ளி முதல் போதாபுரம் வரை 2.350 கி.மீ தொலைவிற்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.60.03 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணி தொடங்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்தில் பணி நிறைவு பெறும். இதனால் மல்லிகுட்டை, மேடுஅள்ளி மற்றும் போதாபுரம் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் பயன் பெறுவார்கள். மல்லிகுட்டை நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கும் 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விலையில்லா வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடி 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.210 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.25 மதிப்பலான ஒரு கிலோ பச்சரிசி, ரூ.42 மதிப்பலான ஒரு கிலோ சர்க்கரை, ரூ.30 மதிப்பலான 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரூ.15 மதிப்பலான இரண்டு அடி நீலக் கரும்புத் துண்டு ஆக மொத்தம் ரூ.112ஃ- மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஒரு குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில்; 3 இலட்சத்து 95 ஆயிரத்து 13 குடும்ப அட்டைகளுக்கு ரூ.4 கோடியே 42 இலட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 574 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டிகள் ரூ.5.13 கோடி மதிப்பிலும் விலையில்லா சேலைகள் ரூ.2.93 கோடி மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.8.06 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ரவி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கோவிந்;தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, மாதையன், காரிமங்கலம் வட்டாட்சியர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடரமணன், முன்னாள்; மல்லிக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர்; முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து