முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டெஸ்ட் தொடர்: டேல் ஸ்டெயின் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேப்டவுன் :  இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கேப் டௌனில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளெஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் 65, டூபிளெஸிஸ் 62 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4, அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸில் 73.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு சுருண்டது. இதனால் முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் பின்தங்கியது.

பின்னர் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்துள்ளது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின், பந்துவீச்சின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 18-ஆவது ஓவரில் பந்துவீசிய போது காலில் வலி ஏற்பட்டதாகக் கூறி வெளியேறினார்.

பின்னர் நடைபெற்ற சோதனையில், கால் தசையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு சிகிச்சை மேற்கொண்டு 6 வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டேல் ஸ்டெயின் நீக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்த ஸ்டெயின், கடந்த ஒரு வருட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். பின்னர், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற 4 நாள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து