முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்ககிரி சட்டமன்ற தொகுதி 286 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையிலும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா , ஆகியோர் முன்னிலையிலும் நேற்று (07.01.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கி கலெக்டர் பேசியதாவது.

தங்கம் வழங்கும் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற பல சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சி விகிதம் 23.6 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் 44.8 சதவீதமாக உள்ளது. பெண் கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. நாட்டில் ஒட்டு மொத்த பெண் கல்வி வளர்ச்சி விகிதம் 22.7 சதவீதம். தமிழக பெண்களின் கல்வி வளர்ச்சி 42.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக பெண்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சமூகநலத்துறை மூலம் திருமண நிதியுதவித் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் இயந்திர திட்டம், குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் ஐவகை உணவுத் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு திட்டம், பாரம்பரிய உணவுத்திருவிழா ஆகிய திட்டங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் 2011 முதல் 2018 வரை 42,484 பயனாளிகளுக்கு 1,78,704 கிராம் தங்கமும் ரூ.146.95 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி அந்தந்த சட்டமன்ற தொகுதியிலேயே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 286 பயனாளிகளுக்கு 2,288 கிராமம் தங்கம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசினார்.

இவ்விழாவில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுரைமுருகன், மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயசீலன், ராஜா, ஆத்மா குழு தலைவர் என்.எஸ்.எம்.மணி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.சி.ஆர்.ரத்தினம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி தலைவர் எம்.கந்தசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பி.செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து