முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராமரிக்காத மகன்களிடம் ரூ. 10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த முதுமை பெண்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

Source: provided

தைபே :  தைவானை சேர்ந்தவர் பெண் லுவே. கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரையும் பல் டாக்டருக்கு படிக்க வைத்து முதுமையில் தன்னை கைவிடாமல் இருப்பதற்காக பிற்காலத்தில் பல் மருத்துவமனை மூலம் வரும் வருமானத்தில் 60 சதவீதத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தமும் செய்து மகன்களிடம் கையெழுத்தும் வாங்கி கொண்டார்.

அதன்படி மகன்களும் தனது தாயாருக்கு ரூ. பணம் தருவதாக ஒப்புக் கொண்டனர். படிப்பு முடிந்து மருத்துவமனையில் இருந்து நல்ல வருமானம் வரும் நிலையில் மகன்கள் வாக்குறுதியின்படி பணத்தை தர முடியாது என்று தாயாரிடம் மறுத்து விட்டனர்.

இதனால் மனமுடைந்த லுவோ, தைவான்  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒப்பந்தப்படி தனக்கு ரூ. 10 கோடியே 50 லட்சம் வழங்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தினார்.

இதற்கிடையே இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது தாய் லுவோவுக்கு, அவரது மகன்கள் ரூ. 6 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். மகன்களிடம் நஷ்ட ஈடு கேட்டு தாய் தொடர்ந்த வழக்கு தைவானில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து