முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் 3-வது திருமணம்? : பாகிஸ்தானில் பரவும் வதந்தி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் :  முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தான் தெக்முக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கி அந்நாட்டு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். இவர் கடந்த 1995ல் லண்டனை சேர்ந்த ஜெமீமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை முதலாவதாக திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2004ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதை தொடர்ந்து 2015ல் டி.வி. தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2வது திருமணம் செய்த இம்ரான் கான், 10 மாதங்களில் அவரையும் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தனிமையில் இருந்த இம்ரான் கான் 3வதாக திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. திருமணத்தை அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் முப்தி சயீத் புத்தாண்டு அன்று நடத்தி வைத்துள்ளார்.

மணப்பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரது முதல் கணவர் ஒரு அரசு ஊழியர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் தெக்முக் இ இன்சாப் கட்சி மறுத்துள்ளது. இம்ரான்கானின் 3வது திருமணம் செய்தி பாகிஸ்தானில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து