முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பொதுக் கூட்டம்:நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      திருவள்ளூர்

திருவள்ளுர் டோல்கேட் அருகேயுள்ள ஈத்கா மைதானத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசை கண்டித்து திருவள்ளுரில் பல்வேறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முஸ்லீம்களின் ஷரியத் சட்டமான முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வருவதில் ஏன் ஆர்வம் காட்டிவருகின்றனர்,அதற்கு காரணம் முஸ்லீம்களை பலி வாங்கும் நோக்கம்தான்.அதனை முஸ்லீம்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனவும்,மத்திய அரசு ஏன் இதுவரை பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்ட மசோதாவை கொண்டுவரவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டத்திற்கு ஜமா அதுல் உலமா சபையின் கௌரவ தலைவர் ஹாஸ் மிஸ்பாஹ் ரஷீத் ஹஸ்ரத்; தலைமை தாங்கினார்.மாநில ஜமா அதுல் உலமா சபை வழிகாட்டு குழு உறுப்பினர் தர்வேஷ் ரஷாதி முன்னிலை வகித்தார்.பொதுக் கூட்டத்தில் மேற்கு மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சீனி ஹாத்தீம்கனி,திருவள்ளுர் மேற்கு மாவட்ட இந்திய முஸ்லீம்லீக் தலைவர் காயல் அகமத் சாலிக்,திருவள்ளுர் மேற்கு மாவட்ட இந்திய முஸ்லீம்லீக் துணைத் தலைவர் எம்.முஹம்மது நௌஷாத்,அகமது பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஜமாஅதுல் உலமாசபை,அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து