சபரிமலை மலைப்பாதையில் காட்டு யானை தாக்கி சென்னை பக்தர் பலி

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      ஆன்மிகம்
Sabarimalai 2017 01 08

பம்பை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில், காட்டு யானை தாக்கியதில், சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி வழிபாடு நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 14 பேர் கொண்ட குழுவினர் கூட்டாக ஐயப்பன் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக சென்று கொண்டு இருந்தனர். கரிமலை ஏற்றத்தில் நேற்று காலை அவர்கள் ஏறினர். அப்போது நிதேஷ் குமார் (வயது 30) என்ற இளைஞர் இயற்கை உபாதை ஏற்பட்டதை அடுத்து வனப்பகுதியில் ஒதுங்கியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த காட்டு யானை ஒன்று, நிதேஷ் குமாரை கடுமையாகத் தாக்கியது. பின்னர் அந்த யானை காட்டுக்குள் சென்றது. உடனடியாக அவரது நண்பர்கள் விரைந்து வந்து நிதேஷ் குமாரை மீட்டு அடிவாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கெனவே நிதேஷ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து