முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்: மதுரையில் நடிகர் கே.பாக்யராஜ் பேட்டி

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

மதுரை :  இன்னும் ஒருமாதத்தில் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார்.

தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது ஒன்றும் புதிதான விஷயமல்ல. மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். உடல்நலம் குன்றி எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தமிழகம் முழுவதும் சென்று அதிமுகவுக்காக பாக்யராஜ் பிரச்சாரம் செய்தார்.
எம்ஜிஆர்  இறந்த பின்னர் ஜானகி அணியை அவர் ஆதரித்தார். அதன் பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் நீண்ட காலம் அமைதியாக இருந்த அவர் பிறகு திமுகவில் சேர்ந்து அந்தக் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்தார்.

தற்பொழுது ஜெயலலிதா மரணம் மற்றும் கலைஞரின் செயல்படாத் தன்மை காரணமாக உருவான அரசியல் வெற்றிடம் காரணமாக கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தங்களது அரசியல் வருகை குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்னும் ஒருமாதத்தில் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:

அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை. கிட்டத்தட்ட, நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன். யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்''.இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து