முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக கட்டமைப்பு சீர்திருத்தங்கள்: ஜெட்லி

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

அதிக கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்ட நாடாக இந்தியா மட்டுமே திகழ்கிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். யூகோ வங்கி யின் 70-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது இதனைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தில் மட்டுமே அதிக கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சீர் திருத்தங்களால் குறுகிய காலத்துக்கு பாதிப்புகள் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்கள் ஏற்பட்டுள்ளன. உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதிலும் கூட இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்தது. மேலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து