முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் விதி மீறல்களை வெளிக் கொண்டு வருபவர்களுக்கு விருது தர வேண்டும்: இந்தியாவுக்கு எட்வர்டு ஸ்னோடன் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, இந்தியாவில் ஆதார் தொடர்பான விதிமீறல்களை தெரியப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமே தவிர விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.

"ரூ.500 அளித்தால் ஆதார் விவரங்களை தரகர் மூலம் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம்" என்று சண்டிகரில் இருந்து வெளியாகும் 'தி டிரிபியூன்' பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து ஆதார் ஆணையம் அளித்த புகாரின்பேரில் அந்த பத்திரிகையின் பெண் நிருபர் ரச்னா கைரா மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் மீதும் அவர் குழுவின் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பான செய்தியை குறிப்பிட்டு எட்வர்டு ஸ்னோடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆதார் தொடர்பான விதிமீறல்களை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டும். விசாரணை நடத்தக்கூடாது. இந்திய அரசாங்கம் உண்மையில் நீதியின் மீது அக்கறை கொண்டிருந்தால் கோடிக்கணக்கான இந்தியர்களின் தனியுரிமையை அழிக்கும் ஆதார் திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதை தவிர்த்து பொறுப்பான பத்திரிகையாளரை கைது செய்ய விரும்புகிறீர்களா?”என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன். பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து