முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறுமாதத்தில் காங்கிரஸ் கட்சி ஜொலிக்கும் பஹ்ரைனில் ராகுல் காந்தி நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

மனாமா (பஹ்ரைன்), காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராகுல் காந்தி முதல்முறையாக பஹ்ரைனில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு  மத்தியில் பேசியுள்ளார். அப்போது, 6 மாதத்தில் ஜொலிக்கும் புதிய காங்கிரஸ் கட்சியை நீங்கள் பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.

இந்தியா என்ற அமைப்புக்கு தற்போது அச்சுறுத்தல் எழுந்துள்ளது. வேலையின்மை, மதம் என்கிற பெயரில் பிரித்தாளும் கொள்கை இந்த இரண்டு பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, மதரீதியாக இளைஞர்களை மோதவிட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது. -ராகுல் காந்தி

எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்கப்போவதாக உறுதியாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல், ஆளும் மத்திய அரசு மக்களை மதம் என்ற பெயரில் பிளவு படுத்தியுள்ளாதாக குற்றம்சாட்டினார். வேலையில்லாத இளைஞர்களின் கோபத்தை உணர்ந்துகொள்ளாத அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களைக்கொண்டு வந்து, நாட்டில் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக மாற்றப்போகிறோம். இந்தியாவில் பிரச்னை இல்லாமல் இல்லை, நாட்டின் பிரச்னைகளை தீர்க்க, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் பங்களிக்கவேண்டும் என்று கூறிய ராகுல், மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து, புதிய சமுதாயத்தை கட்டமைக்க இணைந்து செயல்படவேண்டும் என்றார்.

அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தல் குறித்து பேசிய ராகுல், குஜராத் மண்ணில் பாரதிய ஜனதா கடும் சரிவை சந்தித்துள்ளது. சிறிய இடைவெளியில் வெற்றிபெற்றாலும், அந்த கட்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மேலும் தொடர்ந்து பேசும்போது , மூன்று அம்சங்கள் முக்கியம் என குறிப்பிட்டார். வேலை வாய்ப்புகளை உறுவாக்குவது, வலுவான சுகாதார கட்டமைப்பை உண்டாக்குவது, சிறப்பான கல்வி திட்டம் இந்த மூன்றையும் நல்ல அரசு கொண்டுவரவேண்டும் என்றார்.

இந்தியா என்ற அமைப்புக்கு தற்போது அச்சுறுத்தல் எழுந்துள்ளது. வேலையின்மை, மதம் என்கிற பெயரில் பிரித்தாளும் கொள்கை இந்த இரண்டு பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, மதரீதியாக இளைஞர்களை மோதவிட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.  "இந்தியாவின் பிரச்னையை தீர்க்க உங்களால் முடியும், அதற்கான பாலமாகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்" என்றும், மத்திய அரசு வேலைவாய்ப்புகளை உறுவாக்க தவறியதால், வீதிகளில் நடந்து செல்லும்போது கோபம் கொண்ட மக்கள் வாழும் பகுதிகளில் கலவரமான சூழல் நிலவுவதை கண்டுவருவதாகவும்  ராகுல் காந்தி குறிப்பிட்டது  கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து