முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: பிரதமர் மோடி வேதனை

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

தேகன்பூர், தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
 
அனைத்து மாநில காவல்துறை இயக்குநர்களின் (டி.ஜி.பி) மாநாடு மத்தியபிரதேசத்தில் உள்ள தேகன்பூரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதி நாளன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

உலக அளவில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் அனைத்துத் துறைகளையும் வியாபித்துள்ளன. தொழில்நுட்பத்தை புறந்தள்ளி விட்டு நம்மால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது நல்லதொரு மாற்றம்தான். ஆனால், அதே தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது.

கணினிமயமான இந்த உலகில், இணையவழி அச்சுறுத்தல் என்பது ஒரு தனிநபர் மட்டுமின்றி உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக மாறியிருக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும். எனவே, இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு விவகாரங்கள், கறுப்புப் பணம் குறித்த தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதில் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் பங்கு அளப்பரியது. நாடுகளுக்கு இடையே தற்போது வெளிப்படைத் தன்மை உருவாகியிருக்கிறது. அதுபோல, பாதுகாப்பு விவகாரங்களில் நம் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் உச்சத்தை தொடுவதற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை இன்றியமையாதது. இதனை மனதில் வைத்து காவல் துறையினர் இயங்க வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து