மோசமான வானிலை: சிக்கிம் செல்ல முடியாமல் தவித்த ஏ.ஆர். ரகுமான்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      சினிமா
Rahman concert(N)

காங்டாக் : மேற்கு வங்கத்தின் பக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து மோசமான வானிலையால் ஹெலிகாப்டரில் சிக்கிம் தலைநகர் காங்டாக் செல்ல முடியாமல் தவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்.

சிக்கிம் மாநில அரசின் குளிர்கால திருவிழா நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கத்தின் பக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து சிக்கிம் தலைநகர் காங்டாக் செல்ல ஏ.ஆர் ரகுமானுக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டரில் ஏ.ஆர். ரகுமான் செல்லவில்லை. இதையடுத்து பக்டோராவில் இருந்து சாலை மார்க்கமாக சுமார் 4 மணி நேரம் பயணித்து காங்டாக்கை சென்றடைந்தார் ஏ.ஆர். ரகுமான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து