ஊழல் வழக்கில் சிறையில் உள்ள லல்லு ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்ய முடிவு

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      இந்தியா
lalu prasad yadav 2017 8 4

ராஞ்சி : கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2ஆவது வழக்கில், மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ராஞ்சியில் லல்லுவின் வழக்குரைஞர் பிரபாத் குமார், செய்தியாளரிடம் கூறியதாவது:

ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வாசித்து வருகிறோம். இதையடுத்து, லல்லு பிரசாத்துக்கு ஜாமீன் கோரி, ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். லல்லுவின் சகோதரி இறந்து விட்டதால், பரோல் கேட்டு விண்ணப்பிக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என்றார் பிரபாத் குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து