முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நூல்கள் நன்கொடை வழங்க ஆட்சியர் என்.வெங்கடேஷ் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தூத்துக்குடி

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள், பதிப்பாளர்கள் நன்கொடையாக நூல்கள் வழங்கி உதவிடுமாறு தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்கொடையாக நூல்கள்

தமிழ்நாடு அரசு 2017 - 18 பள்ளிக் கல்வித் துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளான உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல் / பெறுதல் நிகழ்ச்சியை 24.10.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, புத்தக பதிப்பாளர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து புத்தகங்களை நன்கொடையாக பெறும் திட்டத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்து தமிழ் நூல்களை கொடையாக வழங்கினார்கள்.மேலும், கடல் கடந்து வாழும் தமிழருக்கு உயிர்நாடியாய் விளங்கும் தமிழ் நூலகங்களுக்கு நூல்களை வழங்க தமிழ்நாடு அரசு கருதியதன் முதற்கட்டமாக பதிப்பாளர்கள், கொடையாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தமிழில் உள்ள அரும்பெரும் இலக்கியங்கள், பல்வேறு துறைசார்ந்த புதிய நூல்கள் கொடையாகப் பெற்று யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகத்திற்கும், மலேயாப் பல்கலைக் கழகத்திற்கும் பொது மக்களிடமிருந்து ஒரு இலட்சம் அரிய நூல்கள் கொடையாகப் பெற்று தாய் நிலத்து தமிழ்ச் சொந்தங்களின் சார்பில் வழங்கப்படும் திட்டம் தமிழக அரசால் 24.10.2017 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இப்பொருள் தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலகம் அனைத்து நூலகங்கள் / பள்ளி / கல்லூரிகளுக்கு தமிழில் உள்ள இலக்கியம், கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என தமிழில் பல்வேறு துறை சார்ந்த புதிய நூல்களை நன்கொடையாக வழங்க அறிவுரை வழங்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நன்கொடையாக பெற்ற நூல்களை அருகாமையில் உள்ள மாவட்ட மைய / கிளை / ஊர்ப்புற நூலகங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்துமாறும் வேண்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடையாக யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நூல்களை நூலகர், மாவட்ட மைய நூலகம்,டூவிபுரம் 9 வது தெரு,  தூத்துக்குடி 628 003 கைபேசி எண் 7402603636 தொ. பே எண் 0461-2300247, 0461-2338977 என்ற முகவரிக்கு வழங்கி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து