முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.

நடவடிக்கை

இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த செய்ய வேண்டிய பணிகள் மற்றும் காரணங்களை கண்டறிந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விளம்பர பதாகை வைக்க வேண்டும். குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களான போதிய உணவு இல்லாமை, சரிவிகித உணவு இல்லாமை, குடிநீர் குறைபாடுகள், சுற்றுப்புற சுகாதாரம், தன்சுத்தம் பேணாமை, அடிக்கடி நோய் ஏற்படுத்துதல், குறைந்த பிறப்பு எடை உள்ள குழந்தைகள், எடை குறைந்த குழந்தைகள் ஆகியவற்றினை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கே.விவேகானந்தன், பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், மாவட்ட திட்ட அலுவலர் கோ.பத்மாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி மற்றும் இதர துறை அலுவலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து