முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலங்கைமான் வட்டம் தொழுவூரில் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் கனிணி ஆய்வகம், மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் தொழுவூரில் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் கனிணி ஆய்வகம், மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை ஆய்வகம், கட்டிட அமைப்பியல் ஆய்வகம், நூலகம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் திறந்து வைத்தார்.

கனிணி ஆய்வகம்

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவதுவலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்;ந்த மாணவ,மாணவிகளுக்கு இத்தொழில்நுட்ப கல்லூரி கிடைத்திருப்பது தொழில்நுட்ப கல்விக்கு மிகவும் உதவியாக இருக்கும். இன்றைய தினம் இத்தொழில்நுட்ப கல்லூரி கனிணி ஆய்வகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகரணங்களும், மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை ஆய்வகத்தில் ரூ.23 லட்சம் மதிப்பிலான உபகரணங்களும், கட்டிட அமைப்பியல்த்துறை ஆய்வகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான உபகரணங்களும் , நூலகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான புத்தகம் மற்றும் மேசை கலன்களும் ஆக மொத்தம் ரூ.67 லட்சம் மதிப்பிலான தொழில்நுட்ப உபகரண பொருட்களுடம் கூடிய ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதை மாணவ,மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் எல்லா இடங்களிலும் தொழில்நுட்பங்கள் நிறைந்து இருக்கிறது .வேலைவாய்ப்பை பொறுத்தவரை தொழில்நுட்பங்கள் நன்கு கற்றவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நாளிதழ் படிக்க வேண்டும்

கல்லூரியில் படிக்கும் போது கற்ப்பிக்கபடுவதை முழுமையாக நன்கு புரிந்து படிக்க வேண்டும்.மாணவர்கள் மற்றவர்களிடம் கற்றதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும்.அவ்வாறு படிக்கும் போது பொதுஅறிவை வளர்த்து கொள்ளலாம். கல்லூரி நூலங்களில் உள்ள புத்தகங்களை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளுக்கு முழுமையாக தயார்படுத்தி கொண்டு பங்கேற்று வெற்றி பெற வேண்டும். என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வலங்கைமான் அரசினர் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் கே.தமிழரசு,வட்டாட்சியர் பரஞ்ஜோதி மற்றும் விரைவுரையாளர்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து