முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடுநந்தா கல்லூரியில் ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      ஈரோடு
Image Unavailable

ஈரோடு நந்தா கலைக் கல்லூரியில் இந்திய குடிமைப் (ஐஏஎஸ்) பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்   ஈரோடு கோட்டாட்சியர் நர்மதாதேவி பங்கேற்று பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது.
 ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பது மிகப்பெரிய சேவை ஆகும். ஐ.ஏ.எஸ். ஆவதற்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை வேண்டும். முடியாது. என்பது முட்டாள் தனம். நம்மாலும் ஐ.ஏ.எஸ். ஆக முடியும் என்று நம்பி படிக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும் என்பதற்கு கனவு காண வேண்டும். அந்த கனவு நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்றார்.
முன்னதாக, அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் பேசியதாவது
2012-ஆம் ஆண்டு முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 827 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு அதிகாரிகளாகப் பணியாற்றி வருகிறார்கள். நந்தா கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழாவையொட்டி இந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் அதிகமான மாணவ, மாணவிகள் அரசு அதிகாரிகளாக உருவாக்கப்படுவார்கள் என்றார்.
தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன், ஈரோடு அறம் ஐ.ஏ.எஸ். அகாதெமி பொறுப்பாளர் நடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இதில், கல்லூரி நிர்வாக அலுவலர் வெ.ச.சீனிவாசன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள்  கலந்துகொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து