முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் இங்கிலாந்து அமைச்சரானார்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தில் அமைச்சராகியுள்ளார். இதுபோலேவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு எம்.பியான சுயிலா பெர்னாண்டஸூம் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.

இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த தெரஸா மே பிரதமராக உள்ளார். இவர் தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகனும், யங்காஷர் எம்.பி.யுமான ரிஷி சுனக் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பெர்ஹாம் தொகுதி எம்.பி. யான சுயிலா பெர்னாண்டஸூக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், கோவாவை பூர்வீகமாக கொண்டவர். இவர்கள் இருவரும் கடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி. யானவர்கள். இருவருக்கும் தற்போது இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனக்கிற்கு வீட்டுவசதி, உள்ளாட்சித் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. சுயிலா பெர்னண்டஸூக்கு ஐரோப்பிய விவகாரங்கள் துறை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரிஷி சுனக் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.

கடந்த சில ஆண்டுகளாகவே கன்சர்வேடிவ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கட்சியின் அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஏற்கனவே அமைச்சராக இருந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலோக் சர்மாவுக்கு வேலைவாய்ப்புத்துறை மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து