பிளாஸ்டிக்கில் தேசியக்கொடி பயன்படுத்த வேண்டாம் மத்திய அரசு வேண்டுகோள்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      இந்தியா
central gcenovernment(N)

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் தேசியக்கொடி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “முக்கிய நிகழ்ச்சிகளில் தாள்களால் ஆன தேசியக் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கொடி பயன்படுத்தப்படுவதாக எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் கொடிகள் நீண்ட காலத்துக்கு மக்காது என்பதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம். தேசியக்கொடி விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து